TNPSC Thervupettagam

ஊதா வண்ண அறிவிப்பு

April 10 , 2020 1598 days 540 0
  • கோவிட் – 19 தொற்றிற்கு எதிராகப் போராடி வரும் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றைக் குறி வைத்து ரேன்சம்வேர் மூலம் தாக்குதல் நடத்த (தகவல்களை முடக்கிப் பணம் பெறுதல்) இணையவழிக் குற்றவாளிகள் முயற்சித்து வருகின்றனர் என்று சர்வதேசக் குற்றவியல் தடுப்பு காவல்துறை அமைப்பானது (Interpol - International Criminal Police Organisation), தனது  உறுப்பு நாடுகளை எச்சரித்துள்ளது.
  • இது தொடர்பாக, இந்த அமைப்பானது “ஊதா வண்ண அறிவிப்பை” வெளியிட்டு உள்ளது.
  • இது 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
  • பிரான்சின் லியோனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பானது 1923 ஆம் ஆண்டில் சர்வதேசக் குற்றவியல் தடுப்புக் காவல் துறை ஆணையமாகத் தொடங்கப் பட்டது. அதன் பின்னர் 1956 ஆம் ஆண்டில் இது தன்னைத் தானே இன்டர்போல் என்று அழைத்துக் கொண்டது. 
  • இந்தியா இந்த அமைப்பில் 1949 ஆம் ஆண்டில் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்