TNPSC Thervupettagam

ஊதியக் குறைப்பிற்கான அவசரச் சட்டம் 

April 7 , 2020 1567 days 580 0
  • பிரதமர் மற்றும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஊதியத்தில் 30 சதவிகித ஊதியக் குறைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இவர்களைத் தவிர குடியரசுத் தலைவர், ஆளுநர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஊதியங்களும் குறைக்கப்பட இருக்கின்றன.
  • இது தொடர்பான ஒரு அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் சட்டம், 1954 என்ற சட்டத்தைத் திருத்துகின்றது.
  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருத்தப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு படிகளை (சலுகைகளை) தவிர்த்து மாதாந்திர ஊதியமாக ரூ.1 இலட்சம் பெறுகின்றனர்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து குறைக்கப்பட்ட ஊதியமானது இந்தியத் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட இருக்கின்றது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மட்டுமே குறைக்கப் பட்டுள்ளன. அவர்களின் படிகள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் குறைக்கப் படவில்லை.
  • மேலும் மத்திய அமைச்சரவையானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர்ப் பகுதி/ தொகுதி மேம்பாட்டு வளர்ச்சித் திட்டத்தினை (MPLADS - Members of Parliament Local Area Development Scheme) 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2020-21 மற்றும் 2021-22 ஆகிய காலத்திற்கு நிறுத்தி வைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • MPLADS என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர்ப் பகுதி வளர்ச்சித் திட்டம் என்பதைக் குறிக்கின்றது.
  • இது 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
  • இதன் செயல்பாடுகளை மத்தியப் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை  மேற்பார்வையிடுகின்றது. 
  • இது முழுவதும் இந்திய அரசால் நிதி அளிக்கப் படுகின்றது.
  • 2011-12 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு MPக்கும் ஆண்டிற்கு ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் படுகின்றது .
  • இந்த நிதியானது காலாவதியாகாத (non lapsable) தன்மை கொண்டதாகும். அதாவது, குறிப்பிட்ட ஆண்டில் இந்த நிதியானது செலவு செய்யப் படவில்லையெனில் இந்த நிதி அடுத்த ஆண்டுக் கணக்கில் சேர்க்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்