முதுமலை புலிகள் காப்பகத்தின் (MTR) தாங்கல் பகுதி காடுகளில் சமீபத்தில் மேற் கொள்ளப் பட்ட ஊர்வன இனங்களின் கணக்கெடுப்பில் புதிய இனங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
33 ஊர்வன இனங்கள் மற்றும் 36 நீர்நில வாழ் இனங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது நான்கு சாத்தியமான புதிய இனங்களை வெளிப்படுத்தி உள்ளது:
இரண்டு மரப் பல்லிகள் (ஒன்று சினிமாஸ்பிஸ் இனத்தைச் சேர்ந்தது, மற்றும் மற்றொன்று ஹெமிடாக்டைலஸ் இனத்தைச் சேர்ந்தது)
ஓர் அரணை மற்றும்
ஸ்பாரியோதேகா இனத்தைச் சேர்ந்த ஒரு தவளை.
அடையாளம் காணப்பட்ட இனங்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 55 ஊர்வன இனங்கள் மற்றும் 39 நீர் நில வாழ் இனங்கள் ஆக உள்ளன என்ற நிலையில் இதில் தோராயமாக 40% இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தவை.
IUCN அமைப்பின் படி, இவற்றில் சுமார் 16 இனங்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு இதில் மேலும் மூன்று இனங்கள் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாகக் கருதப் படுகிறது.