TNPSC Thervupettagam

ஊர்வன இனங்களின் கணக்கெடுப்பு

September 21 , 2024 63 days 88 0
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தின் (ATR) பொள்ளாச்சிக் கோட்டத்தில் உள்ள கிராஸ் ஹில்ஸ் தேசியப் பூங்கா மற்றும் கரியன் சோலை தேசியப் பூங்காவில் முதன் முறையாக ஊர்வன இனங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இந்தக் கணக்கெடுப்பில் 20 வகையான ஊர்வன மற்றும் 34 வகையான நீர்நில வாழ்வி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இந்த கணக்கெடுப்புக் குழுவானது கிராஸ் ஹில்ஸ் தேசியப் பூங்காவில் 11 ஊர்வன இனங்களையும் 12 நீர்நில வாழ் இனங்களையும் பதிவு செய்துள்ளது.
  • இந்தப் பூங்காவானது வால்பாறை வனப்பகுதியில் சுமார் 3,122 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • உலாந்தி வனச் சரகத்தில் உள்ள டாப் ஸ்லிப் பகுதியில் அமைந்துள்ள கரியன் சோலை தேசியப் பூங்காவில் மொத்தம் ஒன்பது ஊர்வன மற்றும் சுமார் 22 நீர்நில வாழ் இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள ஆனைமலை பறக்கும் தவளை (ராகோபோரஸ் சூடோமலாபாரிகஸ்) மற்றும் டெக்கான் இரவு வாழ் தவளை (நைக்டிபாட்ரசுஸ் டெக்காநென்சிஸ்) ஆகிய இனங்களையும் இந்த ஆய்வுக் குழு பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்