சமீபத்தில் ஊழல் எதிர்ப்பு அமைப்பான டிரான்ஸ்பேரன்ஸி அமைப்பால் (Transparency International) 2018 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஊழல் கண்ணோட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த 2018 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்ட அறிக்கையில் இந்தியா தனது நிலையை 3 புள்ளிகளுக்கு மேம்படுத்தி 41 புள்ளிகளுடன் 78-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
100 புள்ளிகளுக்கு 88 புள்ளிகளைக் குவித்து டென்மார்க் உலகின் மிகக் குறைவான ஊழல் கொண்ட நாடாகவும் அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தும் பின்லாந்தும் ஆகிய நாடுகள் உள்ளன.
சோமாலியா 10 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் அதனையடுத்து தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் உள்ளன.
இந்த அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதன்முறையாக அமெரிக்கா முன்னணி 20 இடங்களிலிருந்து சரிந்து 22-வது இடத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பால் பிரேசிலுடன் இணைக்கப்பட்டு அமெரிக்கா கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு முதல் டரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் ஒரு தனித்துவ ஆராய்ச்சித் தயாரிப்பான இந்த அறிக்கை பொதுத்துறை ஊழலின் உலகளாவிய முன்னணி சுட்டியாக உருவெடுத்திருக்கின்றது.