ஊழல் கண்ணோட்டக் குறியீடு 2023
February 4 , 2024
294 days
459
- 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் மதிப்பிடப்பட்டுள்ள 180 நாடுகளில் இந்தியா 93வது இடத்தைப் பெற்றுள்ளது.
- ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண் மாறாமல் உள்ளது.
- இந்தக் குறியீட்டில் டென்மார்க் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
- பின்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இதில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன.
- 2023 ஆம் ஆண்டு குறியீட்டில் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா, வெனிசுலா (13), சிரியா (13), தெற்கு சூடான் (13), மற்றும் ஏமன் (16) கடைசி இடங்களைப் பெற்றன.
- தெற்காசியாவில் மியான்மர் (162), வங்காளதேசம் (149), பாகிஸ்தான் (133), இலங்கை (115) ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு பின்னதாகவே இடம் பெற்றுள்ளன.
Post Views:
459