TNPSC Thervupettagam

ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியல்

February 23 , 2018 2340 days 685 0
  • சர்வதேச வெளிப்படைத் தன்மைக்கான அமைப்பால் வெளியிடப்படும் (Transparency International) 2017ஆம் ஆண்டிற்கான ஊழல் குறித்த பட்டியலில் இந்தியா 81-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • ஆசிய-பசுபிக் பகுதியில் பத்திரிக்கை சுதந்திரம் வழங்காத மோசமான நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
  • 2016ஆம் ஆண்டு 176 நாடுகளில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது.
  • 2017ஆம் ஆண்டிற்கான இந்தப் பட்டியல் 180 நாடுகளில் அவற்றின் பொதுத்துறையில் உள்ள ஊழலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
  • இந்த பட்டியல் 0 முதல் 100 என்ற அளவுகளைக் கொண்டது.
    • 0 - அதிகளவு ஊழல்
    • 100 - ஊழலற்ற நிலை
  • 2017 பட்டியலில், இந்தியா 40 புள்ளிகள் பெற்றுள்ளது. 2015ல் இந்தியா 38 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • நியூஸிலாந்து 89 புள்ளிகளுடன் முதலிடத்தையும், டென்மார்க் 88 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.
  • மூன்றாவது இடத்தை பின்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் 86 புள்ளிகளுடன் பிடித்துள்ளன.
  • சோமாலியா 9 புள்ளிகளுடன் 180வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • தெற்காசிய நாடுகளைப் பொறுத்தமட்டில், பூடான் 67 புள்ளிகளுடன் 26வது இடத்திலுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்