எஃகுத் தொழில் துறையில் பசுமை ஹைட்ரஜன் குறித்தப் பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள்
February 12 , 2024 290 days 304 0
எஃகுத் தொழில் துறையில் பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான சோதனை திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்கள் என்ற தலைப்பிலான இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளன.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது எஃகுத் தொழில் துறையில் சோதனைத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
இது புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் புதைபடிவ எரிபொருள் சார்ந்த உள்ளீடுகளுக்கு மாற்றாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் விளைபொருட்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சோதனைத் திட்டங்கள் ஆனது, எஃகு அமைச்சகம் மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப் பட்ட அமலாக்க முகமைகள் மூலம் செயல்படுத்தப்படும்.
எஃகுத் தொழில் துறையில் மேற்கொள்ளப்பட உள்ள சோதனைத் திட்டங்களுக்கு உந்துதலாக விளங்கும் பகுதிகளாக மூன்று பிரிவுகள் அடையாளம் காணப் பட்டு உள்ளன.
அவை
இரும்புத் தயாரிப்பில் மேற்கொள்ளப்படும் நேரடி ஆக்சிஜன் குறைப்பு செயல்பாட்டில் ஹைட்ரஜனைப் பயன்படுத்துதல்;
ஊது உலையில் ஹைட்ரஜனைப் பயன்படுத்துதல்; மற்றும்
புதை படிம எரிபொருட்களுக்குப் பதிலாகப் பசுமை ஹைட்ரஜனைப் படிப்படியாக பயன்படுத்துதல்.
இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைக்கச் செய்வதற்காக ஹைட்ரஜன் சார்ந்த வேறு ஏதேனும் ஒரு புதுமையான பயன்பாட்டை உள்ளடக்கிய சோதனைத் திட்டங்களை மேற்கொள்ளவும் இந்தத் திட்டம் உதவும்.