TNPSC Thervupettagam

எகிப்தின் மிகப் பெரிய ராணுவ தளம் திறப்பு

July 24 , 2017 2678 days 1064 0
  • எகிப்தின் மிகப் பெரிய ராணுவ தளத்தை அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • அலெக்ஸாண்ட்ரியா நகருக்கு மேற்கே மார்சா மத்ரோ மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த ராணுவத் தளம்தான் மத்திய கிழக்குப் பிராந்தியத்திலேயே மிகப் பெரியதாகும்.
  • நாட்டின் வட மேற்குப் பகுதியைப் பாதுகாப்பதிலும், கடலோர நகரங்கள், பல முக்கிய ராணுவ நிலைகளைப் பாதுகாப்பதிலும் புதிய ராணுவத் தளம் முக்கியப் பங்காற்றும் என்று அதிபர் அல்சிசி தனது அர்ப்பணிப்பு உரையில் தெரிவித்தார்.
  • புதிய ராணுவத் தளத்துக்கு எகிப்தின் முதல் அதிபர் முகமது நகீப் பெயரிடப்பட்டுள்ளது. ராணுவ தளபதியாக இருந்து பின்னர் அவர் அந்நாட்டின் அதிபரானார்.
  • லிபியாவையொட்டிய எல்லைப் பகுதியில் அண்மையில் ஒரு ராணுவ தளம் அமைக்கப்பட்டதாக எகிப்து அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மிகப் பெரிய ராணுவத் தளத்தை அமைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்