எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்கு எகிப்தில் ஒரு புள்ளிகள் கொண்ட கழுதைப்புலி (குரோகுட்டா குரோகுட்டா) காணப்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
புள்ளிகள் கொண்ட கழுதைப் புலிகள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் அழிந்து விட்டன.
வரிகள் கொண்ட கழுதைப் புலிகள் மற்றும் நிலஓநாய் (பூச்சியுண்ணும் கழுதைப் புலி) ஆகிய இரண்டு கழுதைப் புலி இனங்கள் எகிப்தில் காணப்படுகின்றன.
இந்த காலக் கட்டத்தில் காட்டுப்பன்றிகள் மற்றும் வரிக்குதிரைகள் எகிப்தில் மறைந்து விட்டன.