எகிப்தின் கெய்ரோ எனுமிடத்தில் உள்ள ஹீலியோபோலிஸ் (பண்டைய எகிப்து) போர் கல்லறையில் உள்ள ஹெலியோபோலிஸ் (போர்ட் தெவ்பிக்) நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
இது பெரிய ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறையின் ஒரு பகுதியாகும்.
இந்த நினைவுச் சின்னமானது, முதல் உலகப் போரில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படையெடுப்புகளில் போரிட்டு உயிரிழந்த 3,727 இந்திய வீரர்களின் நினைவாகக் கட்டமைக்கப்பட்டதாகும்.
சூயஸ் கால்வாயின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள இந்த போர்ட் தெவ்பிக் நினைவுச் சின்னமானது 1926 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டில் ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறையில் இந்தியரின் பெயர்களைக் கொண்ட புதிய நினைவுச் சின்னமானது அமைக்கப் பட்டது.