எக்ஸோமார்ஸ் திட்டமானது மென்பொருள் பிரச்சினைகளால் 2 ஆண்டுகள் தாமதமாகத் செலுத்தப்பட இருக்கின்றது.
இப்போது ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் திட்டமானது (European Space Agency mission - ESA) 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
செவ்வாய்க் கிரகத்தின் மீதான எக்ஸோபயாலஜி அல்லது எக்ஸோமார்ஸ் என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்ய விண்வெளி நிறுவனம்) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்.
செவ்வாய்க் கிரகத்தில் காணப்படும் நீர் குறித்த வரலாறு, அதன் புவி வேதியியல், வளிமண்டலக் கலவைகள் போன்றவற்றின் ஆய்வைத் தவிர, செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறை ஆய்வு செய்வதும் இதன் நோக்கமாகும்.
ரோசாலிண்ட் பிராங்க்ளின் என்பது எக்ஸோமார்ஸ் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு ஆய்வு வாகனமாகும்.