அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) அறிவியலாளர்கள் ஒரு புதிய கெளுத்தி மீன் இனத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் இயக்குநரான த்ரிதி பானர்ஜியின் நினைவாக இந்தப் புதிய மீன் இனத்திற்கு ‘எக்ஸோஸ்டோமா த்ரிதியே’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
உயர்மட்ட சியாங் மாவட்டத்தில் உள்ள சியாங் ஆற்றின் கிளை நதியான சிகிங் ஓடையில் இந்தப் புதிய மீன் இனம் ஆனது கண்டறியப்பட்டது.
இந்த மீன் இனமானது, இந்த மலைகளில் உள்ள ஓடைகளில் காணப்படும் ஒரு சிறிய மீன் ஆகும் என்பதோடு இது உள்ளூர்ப் பழங்குடியினரால் 'ங்கோராங்' என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.