TNPSC Thervupettagam

‘எசலா மகா பெரஹெரா’ திருவிழா

August 22 , 2018 2288 days 718 0
  • ஆகஸ்ட் 17ம் அன்று இலங்கையின் கண்டியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த எசலா மகா பெரஹெரா என்ற 10 நாள் திருவிழா ஒரு பெரும் ஊர்வலமாக ஆரம்பிக்கப்பட்டது.
  • எசலா மகா பெரஹெரா திருவிழா ஆனது ஸ்ரீலங்காவின் பௌத்த திருவிழாக்களில் மிகப் பழமையானதும் மிகப்பெரியதும் ஆகும்.
  • இது எசலாவில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகிறது. இது ஞானத்தை அடைந்த பிறகு புத்தர் வழங்கிய முதல் போதனையை நினைவு கூறும் விழா என நம்பப்படுகிறது.
  • இந்த சடங்கு புத்தரின் புனிதமான பல்லை தெருக்கள் வழியாக கொண்டு சென்று நடத்தப்படுகிறது. இது ஆசியாவின் மிக அழகான விழாக்களில் ஒன்று என நம்பப்படுகிறது.
  • இந்த பண்டிகை கண்டியின் கெடம்பேயில் உள்ள மகாவலி ஆற்றில் நடைபெறும் பாரம்பரிய தியா - கெபிமா சடங்கு என்ற  நீர் வெட்டு விழாக் கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்