9 வேதியியல் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான வரி விலைப் பட்டியலில் 8 இலக்க எச்.எஸ்.என் குறியீட்டைக் குறிப்பிடுவதை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
எச்.எஸ்.என் அல்லது ஹார்மோனைஸ்ட் சிஸ்டம் ஆப் நோமென்கிளச்சர் (Harmonized System of Nomenclature – பெயரிடும் முறைக்கான ஒத்திசைவான அமைப்பு) என்பது உலகெங்கிலும் சரக்குகளை வகைப்படுத்துவதற்கான ஓர் அமைப்பாகும்.
இந்தக் குறியீடு பொருட்களுக்கான உலகளாவியப் பொருளாதார மொழி என்று அழைக்கப் படுகிறது.