2023-2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் எச்.ஐ.வி பாதிப்பு 0.16% ஆகக் குறைந்துள்ளது.
1997 ஆம் ஆண்டில் 1.18% ஆக இருந்த எச்.ஐ.வி பாதிப்பானது 2023-2024 ஆம் ஆண்டில் 0.16% ஆகக் குறைந்துள்ளது.
இது தேசியச் சராசரியான 0.23 சதவீதத்தினை விடக் குறைவாகும்.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, 73 எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சை (ART) மையங்கள் ஆனது, மாநிலம் முழுவதும் உள்ள எச்.ஐ.வி/எய்ட்ஸ் (PLHIV) பாதிப்பினைக் கொண்டுள்ள சுமார் 1,32,590 நபர்களுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு, ஆதரவு மற்றும் சிகிச்சையை வழங்குகின்றன.