TNPSC Thervupettagam

எடில்மேன் நம்பிக்கை குறியீட்டு அறிக்கை 2019

January 25 , 2019 2036 days 584 0
  • எடில்மேன் உளவுப் பிரிவால் 2019 ஆம் ஆண்டின் எடில்மேன் நம்பிக்கை குறியீட்டு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
  • இது வர்த்தகம், அரசாங்கம், ஊடகம் மற்றும் அரசு சாரா அமைப்புகளில் உள்ள நம்பிக்கைக்கான கோட்பாடுகள் மீது கவனம் செலுத்தும் முக்கியப் பிரமுகர்களின் கருத்துகள் மீது அமைந்திருக்கும் ஒரு சர்வதேச ஆய்வாகும்.
  • இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அந்த அறிக்கை ஒரு உலகளாவிய நம்பிக்கை குறியீட்டைத் தயாரிக்கின்றது.
  • அதில் உள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு
    • அரசாங்கம், வர்த்தகம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஊடகம் என்று வரும் போது இந்தியா உலகளவில் ஒரு மிகுந்த நம்பிக்கையான நாடுகளில் ஒன்றாகும். ஆனால் இந்தியாவின் உற்பத்திகள் குறைவான நம்பிக்கையைப் பெற்றவையாகும்.
    • தகவலளிக்கப்பட்ட பொது மக்கள் பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பொதுவான மக்கள் பிரிவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இவ்விரு பிரிவுகளிலும் சீனா முதலிடத்தில் உள்ளது.
    • சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் கனடாவில் தலைமையகம் அமையப் பெற்ற நிறுவனங்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவையாகும்.
    • இந்தியா, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகியவற்றில் தலைமையகம் அமையப் பெற்ற நிறுவனங்கள் குறைவான நம்பிக்கையைக் கொண்டவையாகும். இதனைத் தொடர்ந்து சீனா மற்றும் தென் கொரியா ஆகியன உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்