TNPSC Thervupettagam

எடுத்து செல்லக் கூடிய அளவிலான குளிர்பதன சேமிப்பு சாதனம்

November 13 , 2018 2204 days 683 0
  • இந்திய தொழில்நுட்பக் கழகம் - மதராஸ் (IIT- Madras) ஆனது காய்கறி, பழங்கள் மற்றும் இதரப் பொருட்களை சேமித்து வைக்கக் கூடிய சூரிய மின் சக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன சேமிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது.
  • இது 500 கிலோ கொள்ளளவு உடையது. இது போதுமான காலத்திற்கு தங்கள் விளைபொருட்களை சேமித்து வைக்க விவசாயிகளுக்கு உதவும்.
  • இதன் முதல் சாதனம் சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகத்தில் உள்ள பண்ணையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இது 4C முதல் 10C வரையிலான வெப்பநிலை வரம்பில் சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.
  • இந்த திட்டமானது அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை & IIT-M ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்