TNPSC Thervupettagam

எடுத்து செல்லக் கூடிய புதிய அணு கடிகாரம்

June 15 , 2024 33 days 119 0
  • கப்பல்களில் பயன்படுத்தக் கூடிய ஒரு வகையான கையடக்கமான ஒளியியல் அணுக் கடிகாரத்தினை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
  • இந்தச் சாதனங்கள் அளவு மற்றும் வலிமை ஆகியவற்றின் காரணமாக சில துல்லியத் தன்மையினைக் கொண்டுள்ளன.
  • இவை மற்ற கப்பலில் உள்ள நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு அமைப்புகளை விட அதிகம் துல்லியமாக இருந்தன.
  • அணுக் கடிகாரங்கள் அணுக்களைப் பயன்படுத்தி நேரத்தை மிகவும் துல்லியமாக கணக்கிட்டுச் செயல்படுகின்றன.
  • Cs-133 என்பது மிகவும் நிலையான அணு மற்றும் இயற்கையாகவே காணப்படுகிறது, அதனால் தான் இது அணுக் கடிகாரங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தியாவும் தனது எல்லைகளுக்குள் நேரக்கட்டுப்பாட்டிற்காக வேண்டி விநாடிகளை வரையறுப்பதற்கு Cs-133 அணுக் கடிகாரத்தைப் பயன்படுத்துகிறது.
  • ஒரு சீசியம் அணு கடிகாரம் ஒவ்வொரு 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கும் ஒரு நொடியை இழக்கிறது அல்லது பெறுகிறது.
  • அணுக் கடிகாரங்கள் 300 மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடியையே இழக்கும் அல்லது பெறும் என்ற துல்லியத்திற்காக அதிக மதிப்பினைக் கொண்டுள்ளன.
  • ஒளியிழை அணுக் கடிகாரங்கள் 300 பில்லியன் ஆண்டுகளில் ஒரு நொடியை மட்டுமே இழக்கின்றன அல்லது பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்