ஒரு புதிய ஆய்வில், குறைந்த BMI உள்ள நீரிழிவு நோயாளிகள் மற்ற நீரிழிவு நோயாளிகளுடன் ஒப்பிடும் போது தனித்துவமான வளர்சிதை மாற்ற அமைப்பினைக் கொண்டுள்ளனர்.
மேலும் இது இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்கக் கூடிய ஒரு தனித்துவமான நோயாகவும் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
எடைக்குறைப்பு நீரிழிவு நோய் என்பது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் "கலப்பின" வகையாக இருக்கலாம்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் போதுமான இன்சுலின் தயாரிக்காமல் இருக்கலாம் அல்லது அதற்கு சரியான எதிர்வினையை வழங்காமல் இருக்கலாம்.
நீரிழிவு நோய் ஆனது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், குறைந்த BMI உள்ள நபர்களிடையே 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நோயாக நிலவுவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.