TNPSC Thervupettagam

எடை குறைவான குழந்தைகள்

May 17 , 2019 1925 days 593 0
  • “லான்செட் சர்வதேச சுகாதாரம்” என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சி ஆய்வின்படி, 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் குறைந்த எடையுடன் (2500 கிராம் அல்லது 5.5 பவுண்டுகள்) பிறக்கின்றன.
  • உலகில் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேல் தெற்கு ஆசியாவில் பிறக்கின்றன. இங்கு 2015 ஆம் ஆண்டில் 9.8 மில்லியன் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்துள்ளன.
  • உலகில் புதிதாகப் பிறக்கும் 2.5 மில்லியன் குழந்தைகளில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் குறைந்த எடையினால் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றன.
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 834 புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் நல மையங்களைக் கட்டமைத்ததன் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் நலனை மேம்படுத்த சிறப்பாக செயலாற்றுகின்றது.
காரணமும் விளைவும்
  • குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே குழந்தை பிறப்பது (கர்ப்ப காலமான 37 வாரங்களுக்கு முன்பு) அல்லது மிகச் சிறியதாகப் பிறப்பது (கருப்பையிலேயே வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுகின்றது) அல்லது இவை இரண்டுடன் பிறப்பது ஆகியவை குழந்தைகளின் குறைவான எடைக்குக் காரணமாகும்.
  • குழந்தைகள் குறைவான எடையுடன் பிறப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு
    • தாய்மார்களின் வயது (பருவப் பெண்கள் மற்றும் வயதான பெண்கள்)
    • நோய்த் தொற்றுகள், உடற் பருமன் மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை
    • புகைப்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உள்ளாகுதல்
    • பலமுறை கருத்தரித்தல் மற்றும் மருத்துவம் சாராத அறுவைச் சிகிச்சை முறை.
  • குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் குறைந்த வளர்ச்சி மற்றும் மோசமான வளர்ச்சி பாதிப்புகளுக்கு அதிகம் உட்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்