ஹாக்கி இந்தியா அமைப்பிற்கு மதிப்புமிகு எட்டியெனே கிளிகிச் விருது (Etienne Glichitch Award) வழங்கப் பட்டுள்ளது.
நாட்டில் விளையாட்டுத் துறையின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் இந்த அமைப்பு ஆற்றிய பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டி இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
ஹாக்கி இன்வைட்ஸ் என்ற ஒரு காணொலி மாநாட்டின் போது விளையாட்டுப் போட்டிகளின் நிர்வாக அமைப்பான சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பினால் (International Hockey Federation – FIH) இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இது FIH கௌரவ விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைந்த 47வது FIH மாநாட்டின் ஓர் அங்கமாகும்.