எண்ணிமப் பசுமை நடவடிக்கையானது CoP28 மாநாட்டில் (துபாய், 2023) சர்வதேசத் தொலைத் தொடர்பு ஒன்றியத்தினால் (ITU) தொடங்கப்பட்டது.
பசுமை எண்ணிம நடவடிக்கைக்கான COP29 பிரகடனம் ஆனது, தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் பருவநிலைக்கு வேண்டிய நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற எண்ணிமமயமாக்கல் மற்றும் உமிழ்வு குறைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பருவநிலை நடவடிக்கை மற்றும் தகவமைப்பு மிக்க எண்ணிம உள்கட்டமைப்பை உருவாக்குவதையும் ஆதரிக்கிறது.
இது பருவநிலையில் எண்ணிமமயமாக்கலின் தாக்கத்தினை அளவிடுவதற்காக என்று அளவுருக்கள் மற்றும் குறிகாட்டிகளை நிறுவும்.