TNPSC Thervupettagam

எண்ணிமப் பணப் பரிவர்த்தனையில் முன்னணி நகரங்கள் 2022

April 24 , 2023 583 days 274 0
  • 2022 ஆம் ஆண்டில் எண்ணிமப் பணப் பரிவர்த்தனையில் நாட்டிலேயே 5வது முன்னணி நகரமாக சென்னை மாறியுள்ளது.
  • பண வழங்கீட்டுச் சேவை நிறுவனமான வேர்ல்ட் லைன் இந்தியா இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • சென்னையில், 35.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மொத்த மதிப்புடன் 14.3 மில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள 29 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் இதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து புது டெல்லி, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்கள் இடம் பெற்று உள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், நாடு முழுவதும், அடிக்கடி வருகை தந்த நேரடி வணிகப் பிரிவுகளின் மொத்த அளவின் அடிப்படையில் 43 சதவீதத்திற்கு அதிகமாகவும், மொத்த மதிப்பின் அடிப்படையில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தன.
  • இணைய வர்த்தகம், விளையாட்டு, பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் நிதிச் சேவைகள் 85 சதவீதத்திற்கும் மேலானப் பரிவர்த்தனைகளுடன், மொத்த மதிப்பின் அடிப்படையில் 25 சதவீதத்திற்கும் மேலாகப் பங்களித்தன.
  • கல்வி, பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையானது மொத்த அளவில் 15 சதவீதமும் மற்றும் மதிப்பின் அடிப்படையில் 75 சதவீதமும் பங்களித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்