TNPSC Thervupettagam

எண்ணிமப் பொருளாதார அறிக்கை 2024 – UNCTAD (UN வர்த்தகம் மற்றும் மேம்பாடு மீதான அமைப்பு)

July 18 , 2024 128 days 261 0
  • 2024 ஆம் ஆண்டு எண்ணிமப் பொருளாதார அறிக்கையானது, சுற்றுச்சூழலுக்குப் பாதகம் விளைவிக்காத மற்றும் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய எண்ணிம மயமாக்கல் உத்திகளை உருவாக்க வேண்டியதன் அவசரத் தேவையை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • தகவல் மற்றும் தொலைதொடர்புத் தொழில்நுட்ப (ICT) வலையமைப்புகள் ஆனது உலகளாவிய மின்சாரப் பயன்பாட்டில் சுமார் 6% முதல் 12% வரையிலானப் பங்கினை கொண்டுள்ளன.
  • 2010 ஆம் ஆண்டிலிருந்து திறன்பேசிகளின் வருடாந்திர ஏற்றுமதிகள் இரட்டிப்பாகி உள்ளது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் 1.2 பில்லியனை எட்டியுள்ளது.
  • இணைய உலக இணைப்பு (IoT) சாதனங்களின் பயன்பாடானது, 2023 ஆம் ஆண்டில் இருந்த அளவினை விட 2.5 மடங்கு அதிகரித்து 2029 ஆம் ஆண்டில் 39 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 43 நாடுகளின் புதிய தரவு ஆனது, 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இணைய வணிகப் பொருட்களின் விற்பனையானது சுமார் 60% அதிகரித்து 27 டிரில்லியன் டாலரினை எட்டியுள்ளது.
  • சாதனங்களின் திரைகள் மற்றும் சிறிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்களிலிருந்து வரும் கழிவு ஆனது 2010 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 30% உயர்ந்து 10.5 மில்லியன் டன்களை எட்டியது.
  • தகவல் தொடர்பு துறையானது 2020 ஆம் ஆண்டில் சுமார் 0.69 முதல் 1.6 ஜிகாடன்கள் வரையிலான கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான கழிவுகளை வெளியிட்டுள்ளது என்ற நிலையில் இது உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 1.5% முதல் 3.2% பங்கு ஆகும்.
  • தொலைபேசிகள் உற்பத்தியில் 1960 ஆம் ஆண்டில் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 10 தனிமங்களும், 1990 ஆம் ஆண்டில் 27 தனிமங்களும் மற்றும் 2021 ஆம் ஆண்டில் 63 தனிமங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
  • கோபால்ட், கிராஃபைட் மற்றும் லித்தியம் ஆகியவற்றின் தேவையானது 2050 ஆம் ஆண்டிற்குள் 500% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் ஆற்றல் நுகர்வினைப் போல உலகளாவியத் தரவு மையங்கள் அதிக ஆற்றலைப் பயன்படுத்தியதாக - 460 டெராவாட் மணி நேர (TWh) மின்சாரம்- மதிப்பிடப் பட்டுள்ளது.
  • உலகளவில் பிட்காயின் உருவாக்கத்தின் ஆற்றல் நுகர்வு ஆனது 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 34 மடங்கு உயர்ந்துள்ளது.
  • வளர்ச்சியடைந்த நாடுகள் ஒரு நபருக்கு 3.25 கிலோகிராம் என்ற வீதத்தில் எண்ணிம மயமாக்கல் தொடர்பான கழிவுகளை உருவாக்குகின்றன என்ற நிலையில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்த வீதம் 1 கிலோவிற்கும் குறைவான அளவிலேயே பதிவாகி உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 37 பில்லியனாக இருந்த உலக மின்னணுப் பொருட்களின் மறு சுழற்சிச் சந்தையானது 2030 ஆம் ஆண்டிற்குள் 108 பில்லியனாக உயரும் என எதிர் பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்