இது இந்தியக் கணினியிய அவசரகால மீட்பு நிறுவனத்தினால் (CERT-In) மற்ற உலகளாவிய நாடுகளுடன் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.
2025 ஆம் ஆண்டில் மிக அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய பிரிவுகளாக எதிர்பார்க்கப் படும் 7 முக்கியத் தாக்குதல் காரணிகளை இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
இதில் செயற்கை நுண்ணறிவு சார் போலி உருவங்கள் மற்றும் சமூகப் பொறியியல், தீங்கிழைக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மற்றும் இணைய சங்கேதப் பணங்கள் மற்றும் இணையவழி குற்றம் போன்றவை அடங்கும்.
இந்தியாவின் முக்கிய இணைய சங்கேதப் பணப் பரிமாற்றத் தளங்களில் ஒன்றான WazirX, சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டது என்பதோடு இணைய சேவை முடக்கம் செய்யும் நபர்கள், அத்தளத்தின் 230 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பிலான இணைய சங்கேதப் பண இருப்புகளில் சுமார் பாதி அளவினைத் திருடியதாகக் கூறப் படுகிறது.
சமீபத்தில், துபாயில் உள்ள Bybit எனப்படுகின்ற ஓர் இணைய சங்கேதப் பணப் பரி வர்த்தனை நிறுவனத்திடமிருந்து சுமார் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு உள்ள எண்ணிமச் சொத்துக்களை திருடியுள்ளனர் என்ற ஒரு நிலையில் இது இன்று வரையில் பதிவான மிகப்பெரியதான இணைய சங்கேதப் பணத் திருட்டு என்று கூறப் படுகிறது.