TNPSC Thervupettagam

எண்ணிம உலகில் நிலவும் பாலின இடைவெளியை நிரப்புதல்

May 7 , 2023 439 days 242 0
  • யுனிசெப் அமைப்பின் ஒரு அறிக்கையின் படி, உலகளவில் ஆண்களை விட சுமார் 327 மில்லியன் என்ற குறைவான அளவிலான பெண்களே திறன்பேசிகளை வைத்துள்ளனர் மற்றும் கைபேசி வழி இணையச் சேவையினை அணுகக் கூடிய நிலையில் உள்ளனர்.
  • ஆண்களை விடச் சராசரியாக 26 சதவீதத்திற்குக் குறைவான அளவிலான பெண்களே திறன்பேசிகளை  வைத்திருக்கின்றனர்.
  • தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த விகிதம் முறையே 70% மற்றும் 34% ஆக உள்ளது.
  • உலக நாடுகளின் எண்ணிம உலகில் இணையப் பயன்பாட்டில் நிலவுகின்ற பாலின வேறுபாடு ஆனது 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 11% என்ற அளவில் மாறாமல் இருந்தது.
  • பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளில் உள்ள, 15 வயதிலான 5% சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், சராசரியாக 0.5% சிறுமிகள் மட்டுமே தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களாக மாற விரும்புகிறார்கள்.
  • 2015 ஆம் ஆண்டில், ஆண்களை விட பெண்களே அதிகமாக உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்துள்ளனர்.
  • பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் பட்டம் பெற்றவர்களில் 24% மட்டுமே பெண்கள் ஆவர் என்பதோடு, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர்களின் பங்கு வெறும் 25% மட்டுமே ஆகும்.
  • 2015 ஆம் ஆண்டில் சுமார் 120 மில்லியனாக இருந்த இந்தியாவின் இயங்கலை பயனர் அளவானது 2020 ஆம் ஆண்டில், 300 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்