பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (OECD) சமீபத்தில் ஒரு பலதரப்பு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது உலக நாடுகளிடமிருந்து போதுமான ஆதரவைப் பெற்றால், தேசிய எண்ணிமச் சேவை வரிகளுக்கான பல்வேறு குறைபாடுகளை நிவிர்த்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பானது பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் நாடுகளுக்கு இடையேயான வரிவிதிப்பைச் சீரமைக்க செய்வதற்கான தற்போதைய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இது 2021 ஆம் ஆண்டில் சுமார் 140 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச வரி விதிப்பு விதிகளின் இரண்டு அம்ச மறுசீரமைப்பு நடவடிக்கையின் முதல் அம்சமாக உள்ளது.