ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) ஆனது ‘எண்ணிம மய சிறு தீவு நாடுகள்: எண்ணிம உலகம் எவ்வாறு SIDS நாடுகளின் மேம்பாட்டினை ஊக்குவிக்கும்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது வளர்ந்து வரும் சிறு தீவு நாடுகளுக்கான (SIDS) எண்ணிமப் பரிமாற்றத் திறனை எடுத்துக் காட்டுகிறது.
எண்ணிமப் பரிமாற்றத்திற்கான ஐந்து முக்கியத் தகவல்களை இந்த அறிக்கையானது எடுத்துக் காட்டுகிறது.
எண்ணிமத்தின் மதிப்பு மற்றும் பரவலை அங்கீகரித்தல்
தொழில்நுட்பத்தை விட மக்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
ஒவ்வொரு துறையின் பங்குகள், பொறுப்புகள் மற்றும் ஒப்பீட்டு நன்மைகளை அடையாளம் கண்டறிதல்.
எண்ணிமப் பரிமாற்றம் ஆனது பெரும்பாலும் ‘ஒத்த செயல்' மற்றும் எண்ணிமம் அல்லாத அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை அங்கீகரித்தல்.