TNPSC Thervupettagam

எண்ணிம மற்றும் நிலையான வர்த்தக முறைகள் தரவரிசை

July 21 , 2023 368 days 194 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) ஆனது, எண்ணிம மற்றும் நிலையான வர்த்தக முறைகள் குறித்த சமீபத்திய உலகளாவியக் கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 90.32% ஆக இருந்த இந்தியாவின் மதிப்பானது 2023 ஆம் ஆண்டில் 93.55% ஆக உயர்ந்துள்ளது.
  • தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்தியா தற்போது சிறந்த செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது.
  • வெளிப்படைத்தன்மை, முறைமைகள், நிறுவனக் கட்டமைப்பு மற்றும் ஒத்துழைப்பு மற்றும் காகிதமில்லா வர்த்தகம் போன்ற பல்வேறு முக்கியத் துறைகளில் இந்தியா முழு மதிப்பெண்ணை எட்டியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 66.7% ஆக இருந்த “வணிக நடவடிக்கைகளில் பெண்கள்” எனும் பிரிவில் இந்தியாவின் மதிப்பெண் ஆனது 2023 ஆம் ஆண்டில் 77.8% ஆக உள்ளது.
  • கனடா, பிரான்சு, ஐக்கியப் பேரரசு, ஜெர்மனி போன்ற பல வளர்ச்சி பெற்ற நாடுகளை விட இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்