TNPSC Thervupettagam

எண்ணிம வேளாண்மை திட்டம் 2024 – புதிய மைல்கல்

December 13 , 2024 16 days 65 0
  • எண்ணிம வேளாண்மை திட்டத்தின் கீழ் மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இந்தியாவின் முதல் மாநிலமாக குஜராத் மாறியுள்ளது.
  • இம்மாநில அரசானது, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத விவசாயிகளுக்கு 'உழவர் அடையாள அட்டைகளை' உருவாக்கியுள்ளது.
  • அந்த மாநிலத்தின் நிலப் பதிவு அமைப்புடன் செயல்பாட்டு ரீதியாக இணைக்கப்பட்ட மற்றும் ஆதார் அடிப்படையிலான உழவர் அடையாள அட்டையானது, நில உரிமை விவரங்களில் குறிப்பிட்ட மாற்றங்களுடன் சில புதுப்பிப்புகளை உறுதி செய்கிறது.
  • பிரதான மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 9 சதவீத விவசாயிகளுக்கு மத்தியப் பிரதேசம் உழவர் அடையாள அட்டைகளை உருவாக்கியுள்ள ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் அங்கு 2 சதவீத விவசாயிகளுக்கு உழவர் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் இராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களும் இந்த முறையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்