சென்னை பெட்ரோலியக் கழக (CPCL) நிறுவனத்தில் இருந்து பெருமளவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் எண்ணூர் சிற்றோடை (சிறுகுடா) பகுதியில் எண்ணெய் படலம் பரவியது.
கொசத்தலையார் ஆற்றின் ஒரு பகுதியான எண்ணூர் சிற்றோடை, IVவது கடலோர ஒழுங்குமுறை மண்டலம் ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
CPCL நிறுவனத்தில் போதிய கழிவு நீர் மேலாண்மை இல்லாததால், மிக்ஜாங்க் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது எண்ணெய் கலந்த நீர் வெளியானது.
1958 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டத்தின் 356J வது பிரிவு ஆனது ஒரு கப்பல் நிர்ணயிக்கப் பட்ட விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதன் அடிப்படையில் அதனை மாசினை ஏற்படுத்தும் கப்பல் என்று அறிவித்து அதன் உரிமையாளருக்கு அறிக்கை அனுப்பும் அதிகாரத்தினை மத்திய அரசிற்கு வழங்குகிறது.
அதே சட்டத்தின் 356K என்ற பிரிவானது, 356J என்ற ஒரு பிரிவின் கீழ் ஒரு தனிநபருக்கு அறிக்கை அனுப்பப்பட்ட பிறகு, அதற்கு இணங்கத் தவறினால், மத்திய அரசு அந்த நபரைக் குற்றவாளியாக அறிவிக்க முடியும் என்று கூறுகிறது.