TNPSC Thervupettagam

எண்ணெய் உற்பத்திக் குறைப்பு

April 15 , 2020 1593 days 566 0
  • இது சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு புதிய ஒப்பந்தமாகும்.
  • பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளைக் கொண்ட அமைப்பு (OPEC - Organization of Petroleum Exporting Countries) மற்றும் ரஷ்யா ஆகியவை எண்ணெய் உற்பத்தியை 10% என்ற அளவில் குறைக்க முடிவு செய்துள்ளன.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றினால் உலகம் முழுவதும் முடக்கப் பட்டதனால் ஏற்படும் எண்ணெய் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இதற்கு முன்பு சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்திக் குறைப்பைத் தொடங்கிய போது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரஷ்யா மறுத்திருந்தது.
  • OPEC அமைப்பானது ரஷ்யாவைத் தனது உற்பத்தியில் ஒரு நாளைக்கு 3,00,000 பீப்பாய்கள் என்ற அளவிற்கு உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொண்டது.
  • இந்தப் புதிய ஒப்பந்தம் மிகப்பெரிய அளவில் உற்பத்திக் குறைப்புகளை ஏற்படுத்திய போதிலும் எண்ணெய்த் தேவையானது எதிர்பார்ப்பிற்கும் குறைவாக இருப்பதனால் எண்ணெய் விலை மாற்றத்தில் இது எந்தவொரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
  • இந்த ஒப்பந்தமானது அமெரிக்க அதிபர் மற்றும் G20 ஆகியவற்றின் நடுநிலைமையின் மூலம் ஏற்படுத்தப் பட்டதாகும்.
  • OPEC+ என்பது 2017 ஆம் ஆண்டு முதல் எண்ணெய்ச் சந்தைகளில் விநியோகத் திருத்தங்களை மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஒரு கூட்டமைப்பு ஆகும்.
  • OPEC+  ஆனது அசர்பைஜான், பக்ரைன், புருனேய், கஜகஸ்தான், மலேசியா, மெக்சிகோ, ஓமன், இரஷ்யா, தெற்கு சூடான் மற்றும்  சூடான் ஆகிய நாடுகளைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்