TNPSC Thervupettagam

எண்ணெய் உற்பத்தியில் குறைப்பு

October 11 , 2022 651 days 340 0
  • OPEC+ என்ற அமைப்பானது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் (bpd) என்ற அளவிற்குக் குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய குறைப்பு இதுவாகும்.
  • பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பானது 1960 ஆம் ஆண்டில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய ஸ்தாபன உறுப்பினர் நாடுகளால் நிறுவப்பட்டது.
  • அதன் பிறகு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு விரிவாக்கப் பட்டு, அது தற்போது 13 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
  • ரஷ்யாவை உள்ளடக்கிய  மற்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான 11 நட்பு நாடுகளின் சேர்க்கையுடன் இந்தக் குழுவானது OPEC+ என அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்