ஐ.ஐ.டி கவுகாத்தியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மீத்திறனுடன் நீர் விலக்கும் தன்மையுடைய நீரை விலக்கும் மருத்துவ பருத்தியை கண்டுபிடித்துள்ளனர்.
இவை வெவ்வேறு அடர்த்திகளுடைய எண்ணெய் கசிவுகளை 95% வரை அகற்றக் கூடியவை.
இந்தப் பஞ்சுகளின் உட்கிரகித்தல் திறன் மிகவும் அதிகம் – ஒரு கிராம் மீத்திறனுடைய நீர் விலக்கு பருத்தியானது 20 கிராம் இலகு அல்லது கனமுடைய எண்ணெய்களை உறிஞ்சவல்லது.
இப்பஞ்சுகளால் உட்கிரகிக்கப்பட்ட எண்ணெய்யானது இயற்பியல் அழுத்தங்கள் மூலம் மீட்டெடுக்க இயலும்.