எண்ணெய் மற்றும் எரிவாயுக் கொள்கையின் உறுதித் தன்மைக்கான மசோதா
August 10 , 2024 108 days 115 0
2024 ஆம் ஆண்டு எண்ணெய் வயல் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதாவானது மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பல நீண்டகால பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் முதலீட்டாளர்களின் முதலீட்டு நோக்கினை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"சுரங்க குத்தகைக்கு" என்ற வார்த்தைக்குப் பதிலாக "பெட்ரோலியக் குத்தகை" என்று மாற்றுவதற்கு இந்த மசோதாவில் முன்மொழியப் பட்டுள்ளது.
இந்தியாவிற்குள் அல்லது வெளிநாட்டில் உள்ள ஓர் இடத்தில் "பிரச்சினை தீர்க்கும் நெறிமுறையை" இந்த மசோதா முன் வைக்கிறது.
இந்த மசோதாவானது, பெட்ரோலியச் சட்டத்தை மீறுவதைக் குற்றமற்றதாக்க முயலச் செய்வதோடு, அதற்குப் பதிலாக நிதி அபராதங்களை விதிப்பதற்கான பல்வேறு விதி முறைகளை அறிமுகப்படுத்த உள்ளது.