எண்ணெய் வயல் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024
December 10 , 2024 19 days 100 0
மாநிலங்களவையானது, எண்ணெய் வயல் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இது பெட்ரோலியச் செயல்பாடுகளை சுரங்க நடவடிக்கைகளில் இருந்து பிரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இது "கனிம எண்ணெய்கள்" என்ற சொல்லின் நோக்க எல்லையினை விரிவுபடுத்தச் செய்வதோடு பிற விதிகளுள் "பெட்ரோலியக் குத்தகை" என்ற ஒரு கருத்தை அறிமுகப் படுத்துகிறது.
இந்தியா சுமார் 13 பில்லியன் டன் எண்ணெய்க்கு சமமான இன்னும் கண்டறியப்படாத ஆற்றலைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
1948 ஆம் ஆண்டு எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் அதன் மேம்பாடு) சட்டத்தில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய இரண்டு மட்டுமே கனிம எண்ணெய்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதாவானது, நிலக்கரிப் படிம மீத்தேன், கச்சா எண்ணெய், களிப்பாறை வளிமம் (ஷேல் கேஸ்), நிலக்கீல் எண்ணெய், குறைவான ஊடுருவல் தன்மை கொண்ட வாயு, குறைவான ஊடுருவல் தன்மை கொண்ட எண்ணெய் மற்றும் வாயு ஹைட்ரேட் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த ஒரு வரையறையை விரிவுபடுத்துகிறது, ஆனால் பெட்ரோலியத்தின் செயல்பாட்டில் உருவாகும் நிலக்கரி, லிக்னைட் மற்றும் ஹீலியம் இதில் உள்ளடக்கப்படவில்லை.
பின்னர், இந்த மசோதாவானது முன்னர் பயன்படுத்தப்பட்ட சுரங்கக் குத்தகை என்ற சொல்லுக்குப் பதிலாக பெட்ரோலியக் குத்தகை என்ற ஒரு சொல்லினை இதில் மாற்றி அமைப்பதோடு இது நிறுவனங்கள் வளங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அதன் வாய்ப்புகளைத் தேடச் செய்தல் (எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களைத் தேடுதல்), உற்பத்திச் செய்தல், வணிகமாக்குதல் மற்றும் கனிம எண்ணெய்களை அகற்றுதல் ஆகியவற்றினை அனுமதிக்கிறது.