எண்முறை நிர்ணய நாணயத்தை வெளியிடுவதற்கான ஆய்வு நடத்த துறைகளுக்கு இடையேயான குழு அமைப்பு
April 11 , 2018 2421 days 1510 0
ரிசர்வ் வங்கி தன்னால் ஆதரவு அளிக்கப்பட்ட எண்முறை நிர்ணய நாணயம் (Fiat Digital Currency) ஒன்றை வெளியிடுவதற்கான செயலாக்கம் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை ஆராய்வதற்கு துறைகளுக்கு இடையேயான குழு ஒன்றை அமைத்துள்ளது.
நிர்ணய நாணயம் என்பது அரசால் சட்டப்பூர்வமான நாணயம் என்று அறிவிக்கப்பட்டதாகும். இது சங்கேத பணம் எனப் பொருள்படும் கிரிப்டோ (Crypto currency) நாணயத்தைக் காட்டிலும் வித்தியாசமானதாகும். ஏனெனில் அதற்கு அரசின் ஆதரவு கிடையாது.
இங்கிலாந்து வங்கியே இந்த எண்முறை நிர்ணய நாணயத்தை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை பற்றிய உலகளாவிய விவாதத்தை முதலில் தொடங்கிய நிறுவனம் ஆகும்.
2017ம் ஆண்டு நவம்பர் மாதம், உருகுவேயின் மத்திய வங்கி எண்முறையிலான உருகுவேயின் பெசோ (Pesos) நாணயங்களை வெளியிட ஆய்வு செய்யப் போவதாக அறிவித்து இருந்தது.
எண்முறை நிர்ணய நாணயம் அல்லது மத்திய வங்கியின் எண்முறை நாணயம் என்பது நிர்ணய நாணயத்தின் எண்முறை வடிவம் ஆகும். இந்த நாணயம் அரசின் ஒழுங்குமுறை அல்லது சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட ஒன்று ஆகும்.
தனியார்களின் எண்முறை அடையாள வில்லைகளோடு ஒப்பிடும் போது, எண்முறை நிர்ணய நாணயம் ஆனது மத்திய வங்கியால் வெளியிடப்படும்.
எண்முறை நிர்ணய நாணயம், மத்திய வங்கியின் பொறுப்புடைமையைக் கொண்டிருப்பதோடு, பெருவாரியாக உபயோகிக்கப்படும் காகித மற்றும் உலோக நாணயங்களோடு சேர்த்து புழக்கத்தில் இருக்கும்.
பிட்காயின் (Bitcoin) போன்ற ஒழுங்குப்படுத்தப்படாத இணைய நாணயங்களுக்கு முதுகெலும்பு போன்று இருக்கும் கறுப்புச் சங்கிலி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த எண்முறை நிர்ணய நாணயங்கள் அமைந்து இருக்கும்.