TNPSC Thervupettagam

எதிகோப்பக்கா பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு

November 4 , 2017 2579 days 1154 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வராஹா நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள எதிகோப்பக்கா கிராமத்தின் கைவினை கலைஞர்களால் இந்த பராம்பரிய பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
  • ஆந்திராவிலிருந்து GI குறியீடு பெற்றுள்ள கொண்டப்பள்ளி பொம்மைகள், போப்பிலி வீணை, திருப்பதி லட்டு, ஸ்ரீகாளஹஸ்தி கலம்காரி, உப்படா ஜம்தானி சேலைகள், நிழற்பொம்மைகள் பட்டியலில் தற்போது இப்பொம்மைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
  • மென்மைத் தன்மையுடைய அன்குடி கர்ரா மரத்தின் கட்டைகளிலிருந்து உருவாக்கப்படும் இந்த பொம்மைகள் செய்யும் கலையானது 400 வருட பழமையானது. இவை turned wood Lacquer கலை எனவும் அழைக்கப்படும்.
  • 2017-18-ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள வேறு பொருட்களாவன
  1. பொச்சம்பள்ளி ஐகாட் சேலைகள்-தெலுங்கானா
  2. கோபிந்தோபாக் அரிசி - மேற்கு வங்கம்
  3. துர்கி கற்சிற்பங்கள்
  4. சக்சேஷாங் சால்வை-நாகாலாந்து
  5. காஷ்மீர் பாஷ்மினா கம்பளம்
  6. நாக்பூர் ஆரஞ்சு- நாக்பூர்
  7. காங்க்ரா ஓவியங்கள்- இமாச்சலப் பிரதேசம்
  8. பங்கனப்பள்ளி மாம்பழம் – ஆந்திரப் பிரதேசம்
  9. திருப்பதி லட்டு–ஆந்திரா
  10. டார்ஜிலிங் தேயிலை-மேற்கு வங்கம்
  11. துலபாஞ்சி அரிசி - மேற்கு வங்கம்
புவிசார் குறியீடு  (Geographical Indication )
  • புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிப்பிடும் பொருட்களுக்கு அங்கீகரிப்பு தரும்வகையில் அவற்றின் மீது பயன்படுத்தப்படும் ஓர் பெயர் அல்லது சின்னமே புவிசார் குறியீடு எனப்படும்.
  • சிறப்பு தரங்களும், சொந்த இடத்தின் நன்மதிப்பையும் உடைய வேளாண் பொருட்கள், இயற்கை மற்றும் தயாரிப்புப் பொருட்களுக்கு இக்குறியீடு இந்திய காப்புரிமை அலுவலகத்தால்  வழங்கப்படுகிறது.
  • புவிசார் குறியீட்டு அடையாளம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. அதற்கு பிறகு பதிவுப் புதுப்பிப்பு தேவை.
  • தொழிற்துறை சொத்துக்கள் பாதுகாப்பிற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின் (Paris Convention For Protection of Industrial Property) கீழ் அறிவுசார் சொத்துரிமையின் ஒரு பகுதியாக GI உட்சேர்க்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில், உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO-World Trade Organisation) அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தால் (TRIPS-Agreement On Trade-Related Aspects of Intellectual Property Rights) GI நிர்வகிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் GI 1999-ஆண்டின் பல வகை பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் (Geographical Indications of Goods (Registration and Protection Act,1999-GI Act) கீழ் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்