எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிக்கை 2025
January 12 , 2025 4 days 64 0
உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது, 'எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிக்கை 2025' என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
170 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் மற்றும் 92 மில்லியன் வேலை வாய்ப்புகள் இழக்கப்படும் என்ற நிலையில் இதன் விளைவாக 2030 ஆம் ஆண்டிற்குள் நிகர அளவில் 78 மில்லியன் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
பெருந்தரவு நிபுணர்கள், நிதி தொழில்நுட்ப பொறியாளர்கள், செயற்கை நுண்ணறிவு & இயந்திர கற்றல் நிபுணர்கள், மென்பொருள் & செயலி உருவாக்குநர்கள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை நிபுணர்கள் ஆகியோர் வேகமாக அதிகரித்து வரும் முதல் 5 வேலைவாய்ப்புகளில் அடங்குவர்.
உலகளாவியப் பணியாளர்களில் 59% பேருக்கு போட்டித்தன்மையுடன் இருக்க 2030 ஆம் ஆண்டிற்குள் மறு திறனாக்கம் அல்லது திறன் மேம்பாடு தேவைப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பண்ணைத் தொழிலாளர்கள் மிகப் பெரிய அளவில் நன்கு அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் என்ற ஒரு நிலையில் மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக சுமார் 35 மில்லியன் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.