மனித நாகரிக வரலாற்றில் இதுவரையில் எதிர்பாராத வகையில் ஆண்டிஸ் மலைத் தொடர் முழுவதிலும் உள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளன.
பெரிலியம்-10 மற்றும் கார்பன்-14 நியூக்ளைடு அளவினை அளவிட செய்வதன் மூலம், உருகிய பனிப்பாறைகளால் சமீபத்தில் வெளிப்பட்ட பாறைகளை கதிரியக்க கார்பன் கணிப்பு முறையில் மதிப்பிட்ட அறிவியலாளர்கள் அவற்றின் செறிவுகள் கிட்டத்தட்ட சுழியாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த பனிப்பாறைகள் சுமார் 115,000 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்த கடைசிப் பனி ஊழி இடைக்காலத்திலிருந்து இருந்ததை விட சிறிய அளவிலேயே உள்ளன.
11,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஹோலோசீன் சகாப்தத்தில் இந்தப் பாறைகள் தென் படவில்லை.