வியாழன் கோளானது, வானில் அதன் அண்மைப் புள்ளியை (சூரியனுக்கு மிக அருகில்) அடைந்தது.
இந்தக் கட்டத்தில் சூரியன், பூமி மற்றும் வியாழன் ஆகியவை முற்றிலும் நேர்கோட்டில் அல்லது எதிர் நிலையில் இருக்கும்.
இது 13 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும்.
பூமியானது சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையில் எதிரெதிர் நிலையில் அமைந்து இருப்பதால் இந்தக் கிரகத்தைப் பூமிக்கு மிகவும் அருகில் உள்ள இடத்திலும் ஒரு முழு வெளிச்சத்திலும் பார்க்க இயலும்.
வியாழன் கோளானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், இந்த ஆண்டு இரவு வானத்தில் அது பிரகாசமாகவும் மிகத் தெளிவாகவும் இருக்கும்.
இந்த கட்டத்தில், வியாழன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் மற்றும் கோட்பாட்டளவில் அதன் தொலைதூர அல்லது சேய்மைப் புள்ளியுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அளவு பெரிதாக தோன்றும்.
வியாழன் கோளானது அடுத்ததாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று எதிரெதிர் நிலையில் வரும், பின்னர் மீண்டும் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 மற்றும் 2028 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆகிய தேதிகளில் அந்த நிலைக்கு வரும்.