டிவிஎஸ் மோட்டார் நிறுவனமானது எத்தனாலால் இயங்கும் 200 சிசி அப்பாச்சி எனும் பந்தய வண்டிப் பதிப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
டிவிஎஸ் நிறுவனமானது நாட்டின் மூன்றாவது பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும்.
தற்போதுள்ள புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான தொழிலகங்களை முழுவதும் மாற்றுவதற்காக அரசானது உயிரி எரிபொருள்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றது.
பின்வருவன இதற்கான குறிப்பிடத் தகுந்த காரணங்களாகும்.
நமது எண்ணெய் இறக்குமதிச் செலவை குறைத்தல்
அந்நிய செலவாணியைச் சேமித்தல்
மாசுபாட்டை ஒழித்தல்
பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் எத்தனாலானது குறைந்த ஆற்றல் அளிக்கும் திறனையேக் கொண்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலினால் இயங்கும் தூரத்தைப் பெற 1.3 லிட்டர் எத்தனால் பயன்படுத்தப்பட வேண்டும்.