எத்தீரியம் உலகின் இரண்டாவது மதிப்பு மிக்க இணைய சங்கேதப் பணம் ஆகும்.
எத்தீரியம் அதன் நிலைமாற்றத்தை முதன்மை அமைப்பில் ப்ரூஃப்-ஆஃப்-வொர்க் (போட்டித் திறன் மிக்க சரிபார்ப்பு முறை) என்பதிலிருந்து ப்ரூஃப்-ஆஃப்-ஸ்டேஜிற்கு (தேர்ந்தெடுக்கப்பட்ட சரிபார்ப்புக் காரணி முறை) நிறைவு செய்தது.
இது மெர்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது.
இணைய சங்கேதப் பணங்களின் கார்பன் தடயத்தைக் குறைப்பதாகக் கூறி அதன் பாதுகாப்பை அதிகரிக்க உறுதியளிக்கிறது.
மெர்ஜ் எத்தீரியம் வலையமைப்பில் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக ஆக்கும்.
எத்தீரியம் என்பது ஒரு பரவலாக்கப்பட்ட இணைய சங்கேதப் பணமாகும்.
அதன் வலையமைப்பில் நடைபெறும் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கும் வங்கிகள் போன்ற நிறுவனங்கள் இதில் இல்லை.