TNPSC Thervupettagam

என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை

March 20 , 2020 1866 days 710 0
  • மத்திய ஆயுதக் காவல் படைகளின் (Central Armed Police Forces - CAPF) நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் தேசிய மாணவர் படைச் சான்றிதழ் (National Cadet Corps - NCC) வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • NCCல் இந்திய இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

தேசிய மாணவர் படை

  • இது இராணுவம், கடற்படை மற்றும் விமானப் பிரிவுகளைச் சேர்ந்த இளம் மாணவர்களை உள்ளடக்கிய ஒரு முப்படைச் சேவை அமைப்பாகும்.
  • இந்த அமைப்பின் குறிக்கோள் 'ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்' என்பதாகும்.
  • 1948 ஆம் ஆண்டின் தேசிய மாணவர் படைச் சட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படைக் குழுவானது நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்