TNPSC Thervupettagam

என்செலடஸ் துணைக்கோளில் ஹைட்ரஜன் சயனைடு

December 20 , 2023 342 days 265 0
  • சனிக்கோளின் பனி நிறைந்த ஒரு துணைக்கோளான என்செலடஸில் அமைந்த பெருங் கடல்களில் உயிரினங்களை உருவாக்குவதில் முக்கிய மூலக்கூறாக அமைந்த ஹைட்ரஜன் சயனைடு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • என்செலடஸ் துணைக்கோளின் உறைந்த மேற்பரப்பிற்கு அடியில் உள்ள கடல்கள் முன்பு நம்பப் பட்டதை விட அதிக இரசாயன ஆற்றலைக் கொண்டிருக்கக் கூடும்.
  • என்செலடஸின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் நீராவியில் மெத்தனால், ஈத்தேன் மற்றும் ஆக்ஸிஜனுடன் ஹைட்ரஜன் சயனைடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
  • சனிக் கோளின் 146 துணைக் கோளில் ஒன்றான என்செலடஸ், அதன் கட்டமைப்பு காரணமாக வானியலாளர்களுக்கு மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாக உள்ளது.
  • இது நீர் பனிக்கட்டியால் ஆன வெண்மையான, கோடுகள் நிறைந்த மேற்பரப்பைக் கொண்டுள்ளது.
  • இந்த உறைந்த கண்ட மேலோட்டின் கீழ், துணைக் கோள் முழுவதும் பரவிக் காணப் படும் வெப்பமான, உப்பு நிறைந்த கடல் உள்ளது.
  • இந்த வட்ட வடிவ துணைக் கோள் ஆனது, -200°C என்ற மேற்பரப்பு வெப்பநிலையுடன் வெறும் 500 கிமீ அகலம் கொண்டது.
  • ஆனால் அதன் உட்புற அமைப்புகள் பல ஆற்றல் மற்றும் வெப்ப மூலங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்