TNPSC Thervupettagam

என்செலடஸ் துணைக் கோளில் பாஸ்பரஸ் கண்டுபிடிப்பு

July 27 , 2023 489 days 298 0
  • சனிக் கோளின் துணைக்கோளில் இருந்து வெளிவரும் பனித் துகள்களில் பாஸ்பரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்பானது சனிக்கோளின் இதுவரை அறியப்பட்ட 146 இயற்கை துணைக் கோள்களில் ஆறாவது பெரிய துணைக்கோளாக என்செலடஸ் கோளில் கண்டறியப் பட்டுள்ளது.
  • கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் கந்தகம் போன்ற வழ்விற்குத் தேவையான மற்ற ஐந்து தனிமங்கள் இருப்பதற்கான பல அறிகுறிகளை முந்தைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
  • என்செலடஸ் துணைக் கோளில் பாஸ்பரஸின் கண்டுபிடிப்பு ஆனது, இந்தத் துணைக் கோள் ஆனது உயிரினங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உயிர் கட்டமைப்புத் தொகுதிகளைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.
  • பாஸ்பரஸ் பூமியில் காணப்படும் உயிரினங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
  • இது கால்சியத்திற்கு அடுத்தபடியாக மனித உடலில் மிகுதியாக உள்ள இரண்டாவது கனிமமாகும்.
  • எலும்புகள், பற்கள், செல் சவ்வுகள் மற்றும் டிஎன்ஏ ஆகியவை உருவாகுவதற்கு இது இன்றியமையாததாகும்.
  • 13 ஆண்டுகளாக சனி மற்றும் அதன் துணைக்கோள்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் காசினி விண்வெளி ஆய்வுக்கலமானது இந்த முக்கியக் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்