சனிக் கோளின் துணைக்கோளில் இருந்து வெளிவரும் பனித் துகள்களில் பாஸ்பரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பானது சனிக்கோளின் இதுவரை அறியப்பட்ட 146 இயற்கை துணைக் கோள்களில் ஆறாவது பெரிய துணைக்கோளாக என்செலடஸ் கோளில் கண்டறியப் பட்டுள்ளது.
கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் கந்தகம் போன்ற வழ்விற்குத் தேவையான மற்ற ஐந்து தனிமங்கள் இருப்பதற்கான பல அறிகுறிகளை முந்தைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
என்செலடஸ் துணைக் கோளில் பாஸ்பரஸின் கண்டுபிடிப்பு ஆனது, இந்தத் துணைக் கோள் ஆனது உயிரினங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உயிர் கட்டமைப்புத் தொகுதிகளைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.
பாஸ்பரஸ் பூமியில் காணப்படும் உயிரினங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
இது கால்சியத்திற்கு அடுத்தபடியாக மனித உடலில் மிகுதியாக உள்ள இரண்டாவது கனிமமாகும்.
எலும்புகள், பற்கள், செல் சவ்வுகள் மற்றும் டிஎன்ஏ ஆகியவை உருவாகுவதற்கு இது இன்றியமையாததாகும்.
13 ஆண்டுகளாக சனி மற்றும் அதன் துணைக்கோள்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் காசினி விண்வெளி ஆய்வுக்கலமானது இந்த முக்கியக் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளது.