TNPSC Thervupettagam

என்செலடஸ் பெருங்கடல்

October 16 , 2022 772 days 382 0
  • என்செலடஸ் சனிக் கோளின் ஆறாவது பெரிய துணைக்கோள் ஆகும்.
  • சமீபத்தில், அறிவியலாளர் குழு ஒன்று சனிக் கோளின் துணைக் கோளான என்செலடஸின் மேற்பரப்பு கடலில் பாஸ்பரஸ் கரைந்துள்ளதைக் கண்டுபிடித்தது.
  • இது விண்வெளியில் வெளிப்படுகின்ற ஒரு பனி மூடிய நீர் கடலான என்செலடஸ் பெருங்கடலின் ஒரு முக்கியக் கட்டுமானத் தொகுதிக்கான புதிய ஆதாரங்களை வழங்குகிறது.
  • காசினி விண்கலம் மேற்கொண்ட கண்காணிப்புகளின் படி, இது நிலப்பரப்பு சார்ந்த வாழ்வியலின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுதியை உருவாக்குகிறது.
  • பாஸ்பரஸ் என்பது உயிரினங்களை உருவாக்கும் டிஎன்ஏ, உயிரி இழைகள் மற்றும் எலும்புகளுக்கு இன்றியமையாத ஒரு உறுப்பு ஆகும்.
  • பாஸ்பரஸ் தண்ணீரில் கரைந்திருந்தால் மட்டுமே உயிரினங்களால் அதனைப் பயன்படுத்த முடியும்.
  • என்செலடஸில் உள்ள நீரைப் பூமியில் உள்ள நீருடன் ஒப்பிடும் போது அதிக காரத் தன்மை உடையது மற்றும் ஆக்ஸிஜன் இல்லாததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்