எபிக்லோரோஹைட்ரின் மீதான எதிர்ப்பு இறக்குமதி குவிப்புத் தடுப்பு வரி
November 20 , 2024 5 days 53 0
இந்திய அரசானது, சமீபத்தில் எபிக்லோரோஹைட்ரின் இறக்குமதிக்கு ஒரு டன்னுக்கு 557 அமெரிக்க டாலர்கள் வரை என்ற வீதத்தில் இறக்குமதி குவிப்புத் தடுப்பு வரியை விதித்துள்ளது.
இது சீனா, தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பசைத் தொழில் துறையில் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனமாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்க உள்ள இந்த வரியானது, குறைந்த விலை இறக்குமதியினால் ஏற்படும் பாதகமானத் தாக்கங்களில் இருந்து இந்திய உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.
உள்நாட்டுத் தொழில்துறைகளைப் பெருமளவு சீர்குலைத்து நியாயமற்றப் போட்டிக்கு வழி வகுக்கின்ற வகையில் சில பொருட்கள் நியாயமானச் சந்தை மதிப்பை விட மிக குறைவான விலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுவதைத் தடுப்பதற்காக, இறக்குமதி குவிப்புத் தடுப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன.